அழியாச் செல்வம் - கல்விச் செல்வம்
நடேசரட்ணம் சிவகுமார்,
நிறுவுநர் வழி
செல்வங்களில் அழியாச் செல்வம் கல்விச் செல்வம். இச் செல்வத்தை வளர்க்கும் நோக்கமாக எனது பூட்டனாரால் ஆரம்பிக்கப்பட்டுப் பின் எனது பேரனார் அமரர் முதலியார் செல்லப்பா அவர்களால் நிர்வகிக்கப்பட்டு 125 வருடங்களுக்கு மேலாகக் கல்வித்துறையில் வெற்றியோடு வீறுநடைபோடும் விக்ரோறியா அன்னைக்கு முதற்கண் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உலகத்தில் மக்கள் பல மொழிகளிற் கல்வி கற்கிறார்கள். ஆனால் ஆங்கிலக் கல்விதான் எந்தநாட்டிலும் பொதுவான மொழியாக விளங்குகின்றது.
இந் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு 1876 ஆம் ஆண்டு விக்ரோறியாக் கல்லூரி ஆரம்பப் பாடசாலையாகத் தொடங்கப்பெற்றது.
கல்லூரியிற் கற்று வெளியேறிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல துறைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருவது யாவரும் அறிந்த உண்மை.
எனது தந்தையார் டாக்டர் செல்லப்பா நடேசரட்ணம் கல்லூரியின் வளர்ச்சி பற்றிப் பல விடயங்களைப் பல சந்தர்ப்பங்களில் எனக்கு விளக்கியுள்ளார்.
உண்மையிலே அவற்றை அறிந்தபொழுது விக்ரோறியாக் கல்லூரியை ஆரம்பித்த வர்களின் பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதில் மிக மிக பெருமை அடைகிறேன்.
இம்மலரை வெளியிடுவதற்கு முன்னின்று உழைக்கும் தற்போதைய அதிபர், ஆசிரி யர்கள், மலர்க்குழுவினர்களுக்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மலர் சிறந்தமுறையில் வெளிவர இறைவனை இறைஞ்சுகின்றேன்.
This website is developed in May, 2022 and being maintained by JVC OSA, Canada to archive J/Victoria College's historical publications on the Internet for future references.