விநாயகன் அருள்வான்

க.கதிர்காமத்தம்பி அரச்சகர்,
பறாளாய் ஈசஸ்வர விநாயகர் ஆலயம், சுழிபுரம்.

'எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும்!'
'கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி'
'கேடில் விழுச்செல்வம் கல்விரியாருவர்க்கு மாடல்ல மற்றையவை'
'எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடிக் கற்றோரை மேல் வருகென்பர்'
     - இவை பெரியோர்வாக்கு

சென்ற இடமெல்லாம் சிறப்பைத் தருவது கல்வி. இது மனிதருக்கு மிகவும் அவசியமானது.

ஆதிகாலத்தில் குருகுலக்கல்வியாகத் தோன்றித் திண்ணைப் பாடசாலையாக வந்தபோது வசதி படைத்த சிலரே கல்வியாளராக விளங்கினர்.

பின்பு கல்விச்சாலைகள் தோன்றி எல்லாரும் கல்வி பெறும் வசதி ஏற்பட்டது.

காலத்திற்கேற்ற கல்வியென்று ஆங்கிலம் நுழைந்தது.

ஆட்சிமொழியான ஆங்கிலம் கிறிஸ்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் போதிக்கப்பட்டது. அவர்கள் ஆங்கிலக் கல்வியுடன் தங்கள் சமயத்தையும் பரப்பினார்கள்.

அப்போது சைவத்தையும் தமிழையும் வளர்க்க யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் தோன்றினார். அதுபோல சுழிபுரம் கிராமத்திலும் திருவாளர் கனகரத்தினம் முதலியார் முன்வந்தார்.

அவர்களின் விடாமுயற்சியால் கிறிஸ்தவ ஆங்கிலப் பாடசாலைகட்குப் போட்டியாகச் சுழிபுரம் இந்து ஆங்கில பாடசாலை உதயமாகியது. சிறந்த முகாமைத்துவ நிர்வாகத்திறமையால் வளர்ச்சியடைந்து கல்லூரியாக மாறியது. கல்வி நிலையத்தின் சிறப்பு அங்குள்ள மாணவர்களின் கல்வித் தரம், ஒழுக்கம் என்பவற்றால் கணிக்கப்படுகிறது. இதற்கு நிர்வாகத் திறமையுள்ள அதிபரின் உழைப்பும் சக ஆசிரியர்களின் அயராத சேவையும் அவசியம்.

இதற்கமைய இங்கு பொறுப்பேற்ற அதிபர்களின் ஊக்கமும் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் சேர்ந்து பல மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கும் பல தொழில் நிறு வனங்களிற்கும் செல்ல வைத்தது. இதனால் சிரேஷ்ட கல்லூரியென்ற சிறப்புடன் விக்ரோறி யாக் கல்லூரி விளங்குகிறது. தற்போது 125 ஆம் அகவையில் நிற்கும் இக்கல்லூரி மேலும் மேலும் வளர்ந்து பல்கலைக்கழகம் போன்று விஞ்ஞானம், பொறியியல், கணனிக்கலை, கலாசாரம், தொழில் என்ற பலதுறைகளிலும் விருத்தியடைந்து சர்வகலாசாலையாக பல நூற்றாண்டு விழாக்களைக் கண்டு நிலைபெற்றிருக்க பறாளை ஈஸ்வர விநாயகன் திருவருளைப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.

© 2008 - 2022 : J/Victoria College, Chulipuram, Sri Lanka


This website is developed in May, 2022 and being maintained by JVC OSA, Canada to archive J/Victoria College's historical publications on the Internet for future references.